6th தமிழ்-இயல் 1
6th தமிழ்-இயல் 1 - தமிழ்த்தேன்
1.1 இன்பத்தமிழ்
1. "தமிழுக்கு அமுதென்றுபேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? பாரதிதாசன்
2. 'நிருமித்த' என்பதன் பொருள் என்ன? உருவாக்கிய
3. 'சமூகம்' என்பதன் பொருள் என்ன? மக்கள் குழு
4. 'விளைவு' என்பதன் பொருள் என்ன? விளைச்சல்
5. 'அசதி' என்பதன் பொருள் என்ன? சோர்வு
6. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன? சுப்புரத்தினம்
7. சுப்புரத்தினம் பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை எவ்வாறு மாற்றிக் கொண்டார்? பாரதிதாசன்
8. பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்ச்சிக்கான கருத்துக்களை உள்வாங்கி பாடியவர் யார்? பாரதிதாசன்
9. 'புரட்சிக் கவி' என அழைக்கப்படுபவர் யார்? பாரதிதாசன்
10. 'பாவேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்? பாரதிதாசன்
11. தமிழை பலவிதமாக போற்றியவர் யார்? பாரதிதாசன்
12. பாரதிதாசன் தமிழுக்கு இட்ட பெயர் என்ன? அமுது, நிலவு, மணம்
13. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு எவ்வாறு இருக்கும்? அசதியாக
14. "தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா! உனக்கும் எனக்கும், அமிழ்தே நீ இல்லை என்றால் அத்துனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்" என்ற பாடலின் ஆசிரியர் யார்? கவிஞர் காசி ஆனந்தன்
15. உயிருக்கு இணையானது என்று பாரதிதாசன் எதை கூறுகிறார்? அமுதம் போன்ற தமிழ்
16. "கண்ணே மணியே" என்று குழந்தையை கொஞ்சிவது போல செந்தமிழுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தவர் யார்? பாரதிதாசன்
17. பொருத்துக:
i. விளைவுக்கு - நீர்
ii. அறிவுக்கு - தோள்
iii. இளமைக்கு - பால்
iv. புலவர்க்கு - வேல்
v. அசதி - சோர்வு
18. நிலவு + என்று சேர்த்து எழுதுக? நிலவென்று
19. தமிழ் + எங்கள் சேர்த்து எழுதுக? தமிழெங்கள்
20. ஏற்றத் தாழ்வற்ற ____ அமைய வேண்டும்? சமூகம்
21. அமுதென்று பிரித்து எழுதுக? அமுது + என்று
1.2 தமிழ்க்கும்மி
1. தமிழ்க்கும்மி பாடலின் ஆசிரியர் யார்? பெருஞ்சித்திரனார்
2. "கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி" என்ற பாடலின் ஆசிரியர் யார்? பெருஞ்சித்திரனார்
3. ஆழிப் பெருக்கு என்பதன் பொருள் என்ன? கடல் கோள்
4. மேதினி என்பதன் பொருள் என்ன? உலகம்
5. ஊழி என்பதன் பொருள் என்ன? நீண்ட தொருக்காலப்பகுதி
6. உள்ளப்பூட்டு என்பதன் பொருள் என்ன? அறிய விரும்பாமை
7. பெருஞ்சித்திரனார் இயற்பெயர் என்ன? மாணிக்கம்
8. பாவலேறு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்? பெருஞ்சித்திரனார்
9. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்? பெருஞ்சித்திரனார்
10. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் போன்ற இதழ்களை நடத்தியவர் யார்? பெருஞ்சித்திரனார்
11. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது? எட்டு
12. 'வான்தோன்றி, வளி தோன்றி, நெருப்பு தோன்றி' எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? வாணிதாசன்
13. தாய் மொழியில் படித்தால் எதை அடையலாம்? மேன்மை
14. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் சுருங்கிவிட்டது எது? மேதினி - உலகம்
15. செந்தமிழ் பிரித்து எழுதுக? செம்மை + தமிழ்
16. பொய்யக்கற்றும் பிரித்து எழுதுக? பொய் + அகற்றும்
17. பாட்டு + இருக்கும் சேர்த்து எழுதுக? பாட்டிருக்கும்
18. எட்டு + திசை சேர்த்து எழுதுக? எட்டுத்திசை
19. "ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றேனும் நூல்பல கொண்டதுவாம்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது? தமிழ்க்கும்மி
1.3 வளர்தமிழ்
1. உலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை எத்தனை? ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவை
2. மனிதனை பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது? மொழி
3. மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு எது? மொழி
4. தமிழில் மிகப் பழமையான நூல் எது? தொல்காப்பியம்
5. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்? பாரதியார்
6. 'என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று தமிழ்த்தாயின் தொன்மையை பாடியவர் யார்? பாரதியார்
7. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றும் எழுத்து? உயிர்மெய்
8. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களாகவே அமையும்? வலஞ்சுழி
9. வலஞ்சுழி எழுத்துக்கள் எவை? அ, எ, ஒள, ண, ஞ
10. இடஞ்ச்சுழி எழுத்துக்கள் எவை? ட, ய, ழ
11. "தமிழின் கிளவியும் அதனோ ரற்றே" தமிழ் என்ற சொல்லை குறிப்பிடும் நூல் எது? தொல்காப்பியம்
12. தமிழ் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? தொல்காப்பியம்
13. தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? சிலப்பதிகாரம்
14. "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது? சிலப்பதிகாரம்
15. தமிழன் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?அப்பர் தேவாரம்
16. "தமிழன் கண்டாய்" என்ற சொல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? அப்பர் தேவாரம்
17. சீர்மை என்பது எதனை குறிக்கும்? ஒழுங்கு முறை
18. அல் + திணை என்பதன் பொருள் என்ன? உயர்வு அல்லாத திணை
19. திணைகள் எத்தனை? இரண்டு (உயர்திணை, அஃறிணை)
20. பாகற்காய் என்பதன் பொருள் என்ன? பாகு அல்லாத காய்
21. பாகற்காய் எவ்வாறு பிரிவும்? பாகு + அல் + காய்
22. தமிழ்மொழியில் பலவகை சீரமைகளில் குறிப்பிடத்தக்கது எது? சொற்பிறப்பு
23. தமிழில் மிகுந்துள்ள நூல்கள் எவை? தொல்காப்பியம், நன்நூல்
24. சங்க இலக்கியங்கள் எவை? எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
25. தமிழில் உள்ள அறநூல்கள் எவை? திருக்குறள், நாலடியார்
26. பூப்பது முதல் காய்ப்பது வரை எத்தனை நிலை உண்டு? 7
27. "மா" என்ற சொலின் பொருள் என்ன? மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு
28. பூவின் ஏழு நிலைகள் எவை? அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
29. தமிழின் தற்போதைய வளர்ச்சி என்ன? அறிவியல் தமிழ், கணினி தமிழ்
30. ஆல், அரசு, மா, பலா, வாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? இலை
31. அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? கீரை
32. அருகு, கோரை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? புல்
33. நெல், வரகு போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? தாள்
34. மல்லி செடியின் இலைப்பெயர் என்ன? தழை
35. சப்பாத்திக்கள்ளி, தாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? மடல்
36. கரும்பு, நாணல் போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? தோகை
37. பனை, தென்னை போன்ற மரத்தின் இலைப்பெயர் என்ன? ஓலை
38. கமுகு மரத்தின் இலைப்பெயர் என்ன? கூந்தல்
39. தமிழ் எண்கள்
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சா, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - க0
40. தமிழின் சிறப்பு பெயர் என்ன? முத்தமிழ்
41. உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் எது? இசைதமிழ்
42. எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ் எது? இயல் தமிழ்
43. நாடகத்தமிழ் எதை நல்வழிப்படுத்தும்? உணர்வில் கலந்த வாழ்வை
44. சமூக ஊடகங்கள் எவற்றில் பயன்படத்தக்க மொழியாக திகழ்கிறது தமிழ்மொழி? செய்தித்தாள், தொலைக்காட்சி
45. கணினி மொழிக்கும் ஏற்ப நுட்பமான வடிவத்தை பெற்றுள்ள நூல் எது? தொல்காப்பியம், நன்நூல்
46. தமிழ்க் கவிதை வடிவங்கள் எவை? துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்
47. தமிழ் உரைநடை வடிவங்கள் எவை? கட்டுரை, புதினம், சிறுகதை
48. வேளாண்மை என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? கலித்தொகை - 101, திருக்குறள் - 81
49. உழவர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? நற்றிணை - 4
50. பாம்பு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? குறுந்தொகை - 239
51. வெள்ளம் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? பதிற்றுப்பத்து - 15
52. முதலைஎன்ற சொல் இடம் பெற்ற நூல் எது? குறுந்தொகை - 324
53. கோடை என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? அகநானூறு - 42
54. உலகம் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? தொல்காப்பியம், கிளவியாக்கம் - 56, திருமுருகாற்றுப்படை - 1
55. மருந்து என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? அகநானூறு - 147, திருக்குறள் - 952
56. ஊர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? தொல்காப்பியம், அகத்திணையியல் - 41
57. அன்பு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? தொல்காப்பியம், களவியல் - 110, திருக்குறள் - 84
58. உயிர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? தொல்காப்பியம், கிளவியாக்கம், திருக்குறள்
59. மகிழ்ச்சி என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? தொல்காப்பியம், கற்பியல், திருக்குறள்
60. மீன் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? குறுந்தொகை
61. புகழ் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? தொல்காப்பியம், வேற்றுமையியல் - 71
62. அரசு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? திருக்குறள் - 554
63. செய் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? குறுந்தொகை - 72
64. சொல் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? தொல்காப்பியம், புறத்திணையியல் - 75
65. பார் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? பெரும்பாணாற்றுப்படை
66. ஒழி என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? தொல்காப்பியம், கிளவியாக்கம் - 48
67. முடி என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? தொல்காப்பியம், வினையியல்
68. "நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? கவிஞர் அறிவுமதி
69. "வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? கவிஞர் அறிவுமதி
70. 'தொன்மை' என்ற சொல்லின் பொருள் என்ன? பழமை
71. 'இடப்புறம்' என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் என்ன? இடம் + புறம்
72. 'சீரிளமை' என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் என்ன? சீர்மை + இளமை
73. சிலம்பு + அதிகாரம் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன? சிலப்பதிகாரம்
74. கணினி + தமிழ் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன? கணினித்தமிழ்
75. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எதன் அடிப்படையில் வடிமைக்கப்பட வேண்டும்? எண்கள்
1.4 கனவு-பலித்தது
1. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று ஐந்தும் கலந்தது உலகம் என்னும் அறிவியல் உண்மையை கூறும் நூல் எது? தொல்காப்பியம்
2. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆரறிவு வரை வகைப்படுத்தியவர் யார்? தொல்காப்பியர்
3. "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி" என்ற பாடலை இயற்றியவர் யார்? ஒளவையார்
4. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? பதிற்றுப்பத்து
5. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தை நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? நற்றிணை
6. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் யார்? கலீலியோ
7. "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? தொல்காப்பியம்
8. "கடல்நிர் முகந்த கமஞ்சூழ் எழிலி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? கார்நாற்பது
9. "நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? பதிற்றுப்பத்து
10. "கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? நற்றிணை
11. "திணையளவு போதச் சிறுபுல்நீர் நீண்ட பணையவு காட்டும்" என்ற பாடல்வரியை இயற்றியவர் யார்? கபிலர்
12. தமிழ் பயின்ற குடியரசுத் தலைவர் யார்? அப்துல்கலாம்
13. தமிழ் பயின்ற இஸ்ரோ அறிவியல் அறிஞர் யார்? மயில்சாமி அண்ணாதுரை
14. இஸ்ரோவின் தலைவர் யார்? சிவன்
1.5 தமிழ்-எழுத்துக்களின்-வகை-தொகை
1. தமிழ்மொழியில் இலக்கணம் எத்தனை வகைப்படும்? ஐந்து (எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்)
2. ஒலி வடிவமாக எழுதப்படுவதும் வரி வடிவமாகவும் எழுதப்படுவதும் எது? எழுத்து
3. உயிருக்கு முதன்மையானது எது? காற்று
4. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது எந்த எழுத்துக்கள் பிறக்கின்றன? உயிர் எழுத்துக்கள்
5. உயிர் எழுத்துக்கள் எத்தனை? 12
6. தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் எத்தனை? ஐந்து (அ, இ, உ, எ, ஒ)
7. தமிழில் உள்ள உயிர் நெடில் எழுத்துக்கள் எத்தனை? ஏழு (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள)
8. கால அளவை குறிப்பது எது? மாத்திரை
9. ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் காலஅளவு எவ்வளவு? ஒரு மாத்திரை
10. குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு எவ்வளவு? ஒரு மாத்திரை
11. நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு எவ்வளவு? இரண்டு மாத்திரை
12. மெய் எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவு எவ்வளவு? அரை மாத்திரை
13. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு எவ்வளவு? அரை மாத்திரை
14. மெய் எழுத்துக்கள் எத்தனை? 18
15. மெல்லின எழுத்துக்கள் எவை? ங், ஞ், ண், ந், ம், ன்
16. வல்லின எழுத்துக்கள் எவை? க், ச், ட், த், ப், ற்
17. இடையின எழுத்துக்கள் எவை? ய், ர், ல், வ், ழ், ள்
18. மெய் எழுத்துக்கள் பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை? உயிர்மெய் எழுத்துக்கள்
19. கலைச்சொற்கள்:
Clockwise - வலஞ்சுழி
Internet - இணையம்
Search engine - தேடுபொறி
Anti clockwise - இடஞ்சுழி
Voice search - குரல்தேடல்
Touch screen - தொடுதிரை