10th தமிழ் இயல் 7.5 மங்கையராய்ப்-பிறப்பதற்கே

10th தமிழ் இயல் 7.5 மங்கையராய்ப்-பிறப்பதற்கே
: :

1. ஐ. நா அவையில் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையை பாடியவர் யார் எம். எஸ். சுப்புலட்சுமி
2. 'காற்றினிலே வரும் கீதமாய்' மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் யார்? எம். எஸ். சுப்புலட்சுமி
3. இசைப்பேரரசி என்று நேருவால் புகழப்பட்டவர் யார்? எம். எஸ். சுப்புலட்சுமி
4. எம். எஸ். சுப்புலட்சுமியின் குரு யார்? அவருடைய தாய்
5. எம். எஸ். சுப்புலட்சுமி எந்த வயதில் பாடல்களை பதிவு செய்தார்? 10 வயதில்
6. எம். எஸ். சுப்புலட்சுமியின் பெயரின் விரிவாக்கம்? மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
7. எம். எஸ். சுப்புலட்சுமி எதுவரை படித்துள்ளார்? 5ம் வகுப்பு
8. எம். எஸ். சுப்புலட்சுமி தன் 17 - வது வயதில் எங்கு கச்சேரி நடத்தினார்? சென்னை மியூசிக் அகாடமி
9. எம். எஸ். சுப்புலட்சுமிக்கு எந்த திரைப்படம் வெற்றியைத் தந்தது? மீரா திரைப்படம்
10. எம். எஸ். சுப்புலட்சுமியின் கடைசி திரைப்படம் எது? மீரா
11. எம். எஸ். சுப்புலட்சுமியின் எந்த பாடலுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது? காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன்
12. எம். எஸ். சுப்புலட்சுமியை பாராட்டியவர்கள் யார்? நேரு, சரோஜினி நாயுடு
13. காந்தியடிகள் முன்பு எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய பாடல் எது? இரகுபதி இராகவ இராஜாராம்
14. காந்தியடிகள் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் எந்த பாடலை பாடுமாறு கேட்டுக்கோண்டார்? மீரா எழுதிய பாடல்கள்
15. காந்தியடிகள் கேட்டு எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய 'ஹரி தும் தும் ஹரோ ' என்ற மீரா பஜன் பாடல் எந்த ஆண்டு சென்னை வானொலி நிலையம் ஒளிபரப்பியது? 1947 ஆம் ஆண்டுகாந்தியடிகள் பிறந்த நாள் அன்று
16. எம். எஸ். சுப்புலட்சுமி இங்கிலாந்தில் பாடிய ஆண்டு எது? 1963
17. எம். எஸ். சுப்புலட்சுமி ஐ. நா அவையில் பாடிய ஆண்டு என்ன? 1966
18. எம். எஸ். சுப்புலட்சுமி 1954 ஆண்டு தாமரையணி விருது பெற்றபோது அவரை தொட்டுத் தடவி பாராட்டியவர்? ஹெலன் கெல்லர்
19. எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலில் பதிவு செய்யபட்ட வெங்கடேச சுப்ரபாதம் எங்கு ஒலிக்கத் தொடங்கியது? திருப்பதியில், 1966 ஆண்டு
20. எம். எஸ். சுப்புலட்சுமிக்கு நோபல் பரிசுக்கு இணையான 'மகசேசே விருது' வழங்கிய ஆண்டு? 1974
21. மகசேசே விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்? எம். எஸ். சுப்புலட்சுமி
22. எம். எஸ். சுப்புலட்சுமி எந்த மொழிகளில் பாடியுள்ளார்? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம்
23. எம். எஸ். சுப்புலட்சுமியின் இந்திய அரசு என்ன விருது வழங்கி கெளரவித்தது? இந்திய மாமணி விருது
24. "குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா" - என்று பாடியவர் யார்? எம். எஸ். சுப்புலட்சுமி
25. பொதுவெளியில் நடனம் ஆடுவது குற்றம் என்ற காலத்தில் தன் நடன வாழவைத் தொடங்கிவர் யார்? பாலசரசுவதி
26. இந்திய அரசின் எந்த விருதை பாலசரசுவதி பெற்றுள்ளவர்? தாமரை செவ்வணி விருது
27. பாலசரசுவதி ஏழு வயதாக இருக்கும் போது முதன் முதலில் நடன அரங்கேற்றம் நிகழ்த்திய இடம் எது? காஞ்சிபுரம்
28. பாலசரசுவதி தன் 15 ஆம் வயதில் நடன அரங்கேற்றம் நிகழ்த்திய இடம் எது? சென்னை, சங்கீத சமாஜம்
29. நம் நாட்டுப்பண்ணுக்கு நடனமாடியவர் யார்? பாலசரசுவதி, சென்னை
30. யார் பாலசரசுவதி நாட்டியதைக் கண்டு மிகவும் பாராட்டினார்? பண்டிட் இரவிசங்கர்
31. டோக்கியோவில் எந்த நிகழ்வின் பொது பாலசரசுவதி நடனம் ஆடினார்? கிழக்கு மேற்குச் சந்திப்பு
32. தமிழில் எழுதிய பெண்களில் முதன் முதலில் களத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டி கதை எழுதியவர் யார்? ராஜம் கிருஷ்ணன்
33. வேருக்கு நீர் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்? ராஜம் கிருஷ்ணன்
34. சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்? ராஜம் கிருஷ்ணன்
35. 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி ' என்னும் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் யார்? ராஜம் கிருஷ்ணன்
36. தூத்துக்குடியில் பல மாதங்கள் தங்கியிருந்து உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையை "கரிப்பு மணிகள்" என்ற புதினம் எழுதியவர் யார்? ராஜம் கிருஷ்ணன்
37. குறிஞ்சித் தேன்" என்ற புதினத்தில் படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்து பதிவு செய்தவர் யார்? ராஜம் கிருஷ்ணன்
38. "அலையாய்க் கறையில்" என்ற புதினத்தில் கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பற்றி பதிவு செய்தவர் யார்? ராஜம் கிருஷ்ணன்
39. "சேற்றில் மனிதர்கள்", "வேருக்கு நீர்" என்ற புதினத்தில் அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை சுட்டிக்காட்டியவர் யார்? ராஜம் கிருஷ்ணன்
40. ராஜம் கிருஷ்ணன் எழுதிய எழுத்துலக தளங்கள் யாவை? புதினங்கள், கட்டுரை, சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல், குழந்தை இலக்கியம், வரலாற்று நூல்
41. குழைந்தைகளை தீப்பெட்டித் தொழிலில் முடக்கி, தீக்குச்சிகளை அந்தப் பெட்டியில் அடைப்பதை போன்று, குழந்தைகளின் உடலையும் மனதையும் நொறுக்கும் அவல உலகைக் கூறும் "கூட்டுக் குஞ்சுகள்" என்ற புதினத்தை படைத்தவர்? ராஜம் கிருஷ்ணன்
42. பெண்குழைந்தைகளுக்கான கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து ராஜம் கிருஷ்ணன் எழுதிய நூல் எது? மண்ணகத்துப் பூந்துளிகள்
43. சமூக அவலங்களை தன் புதினத்தில் எழுதியவர் யார்? ராஜம் கிருஷ்ணன்
44. மதுரையின் முதல் பட்டதாரிப் பெண் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
45. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பெற்ற விருதுகள் யாவை? இந்திய அரசு - தாமரைத் திரு விருது, சுவீடன் அரசு - வாழ்வுரிமை விருது, சுவிட்சர்லாந்து அரசு - காந்தி அமைதி விருது
46. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் கல்லூரிப் பருவத்தில் யார் சிந்தனையால் ஈர்க்கப்பட்டார்? காந்திய சிந்தனை
47. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் எதில் களப்பணி ஆற்றினார்? சர்வோதய இயக்கம்
48. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் எந்த போராட்டங்களில் பங்கு கொண்டார்? ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு, சட்ட மறுப்பு இயக்கம்
49. நாட்டின் விடுதலைக்குப்பின் கணவருடன் இணைந்து "பூதான "இயக்கத்தில் பணிபுரிந்தார்? கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
50. "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம் வர செய்தவர்? கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
51. "உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள், உங்களால் எதையும் சாதிக்க இயலும்"என கூறியவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
52. காந்தியடிகளுடன், வினோபாவேயுடனும் பணியாற்றியவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
53. பள்ளி பருவத்தில் படிக்க இயலாவிட்டாலும் பட்டறிவால் கற்றுக்கொண்டவர் யார்? சின்னப்பிள்ளை
54. களஞ்சியம் என்ற குழுவை ஆரம்பித்தவர் யார்? சின்னப்பிள்ளை
55. நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தவர்கள் யாவர்? சின்னப்பிள்ளை மற்றும் பெண்கள் குழு
56. சின்னப்பிள்ளைக்கு மீன் பிடிக்கும் குத்தகையை யார் கொடுத்தார்? மதுரை ஆட்சியர்
57. சின்னப்பிள்ளை பெட்ரா விருதுகள் யாவை? ஸ்திரீ சக்தி புரஸ்கர் விருது - வாஜ்பாய் கைகளில், ஒளவை விருது - தமிழக அரசு, பொதிகை விருது - தூர்தர்சன், இந்திய அரசு - தாமரைத் திரு விருது