10th தமிழ் இயல் 6.6 அகப்பொருள்-இலக்கணம்

10th தமிழ் இயல் 6.6 அகப்பொருள்-இலக்கணம்
: :

1. தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை எவ்வாறு பிரிந்தனர்? அகம், புறம்
2. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது? அகத்திணை எனப்படும்
3. அகத்திணை வகைகள் எத்தனை? 7 வகை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை)
4. ஐந்து திணைகளுக்கு உரியன யாவை? முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.
5. முதற்பொருள் என்பது எதனைக் குறிக்கும்? நிலம், பொழுது
6. நிலம் எத்தனை வகைப்படும்? ஐந்து வகை
7. பொழுது எத்தனை வகைப்படும்? இரண்டு வகை (பெரும்பொழுது, சிறும்பொழுது)
8. நம் முன்னோர்கள் பெரும்பொழுதை ஓராண்டில் எத்தனை கூறுகளாக பிரித்துள்ளனர்? ஆறு
9. ஒரு நாளில் எத்தனை கூறுகள் சிறும்பொழுது என்று பிரித்துள்ளனர்? ஆறு
10. எல் + பாடு சேர்த்து எழுதுக? ஏற்பாடு
11. எல் என்பது எதைக் குறிக்கும்? ஞாயிறு
12. பாடு என்பது எதைக் குறிக்கும்? மறையும் நேரம்
13. கருப்பொருள் என்றால் என்ன? ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு, இவையெல்லாம் கருப்பொருள் ஆகும்.
14. குளிர்காலத்தைக் பொழுதாக கொண்ட நிலங்கள் எது? குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
15. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரில் செயப்பாட்டு வினை தொடர் எது? ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
16. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன? அங்கு வறுமை இல்லாததால்
17. சிறு நண்டு மணல் மீது படம்மென்று கீறும் - என்ற வரியை பாடியது யார்? மகாகவி (இலங்கை)
18. தேன்மழை என்னும் நூலை எழுதியவர் யார்? சுரதா
19. "திருக்குறள் நீதி இலக்கியம்" என்ற நூலை எழுதியவர் யார்? க. த. திருநாவுக்கரசு
20. நாட்டார் கலைகள் என்னும் நூலை எழுதியர் யார்? அ. க. பெருமாள்