10th தமிழ் இயல் 4.3 பரிபாடல்
1. "விசும்பில் ஊழி ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி" என்ற பாடலின் ஆசிரியர் யார்? கீரந்தையார்
2. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று எது? பரிபாடல்
3. ஓங்கு பரிபாடல் என்ற பெருமையுடைய நூல் எது? பரிபாடல்
4. பரிபாடலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்? 70 பாடல்கள்
5. பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது? 24
6. சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது? பரிபாடல்
7. நெருப்புப் பந்தாய் வந்து குளிர்ந்த பூமி என்று கூறும் நூல் எது? பரிபாடல்
8. விசும்பு என்பதன் பொருள் என்ன? வானம்
9. ஊழி என்பதன் பொருள் என்ன? யுகம்
10. ஊழ் என்பதன் பொருள் என்ன? முறை
11. ஆர்தருபு என்பதன் பொருள்? வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
12. ஈண்டி என்பதன் பொருள் என்ன? செரிந்து திரண்டு
13. பீடு என்பதன் பொருள் என்ன? சிறப்பு
14. தண்பெயல் என்பதன் பொருள் என்ன? குளிர்ந்த மழை
15. ஊழ்ஊழ் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? அடுக்குத்தொடர்
16. வளர்வானம் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? வினைத்தொகை
17. செந்தீ என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? பண்புத்தொகை
18. வாரா (ஒன்றன்) என்பதன் இலக்கணைக்குறிப்பு என்ன? ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
19. நம் பால் வீதிகள் போன்று பல பால் வீதிகள் உள்ளன என்று அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்த ஆண்டு? 1924
20. 1300 ஆண்டுகளுக்கு முன்னரே அண்டப் பகுதியை பற்றி எழுதியவர் யார்? மாணிக்கவாசகர
21. "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" என்ற திருவாசகப் பாடலை பாடியவர் யார்?மாணிக்கவாசகர்
22. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, இயற்கையை புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை எந்த நூல் மூலம் அறியலாம்? சங்க இலக்கியம்