10th தமிழ் இயல் 3.2 காசிக்காண்டம்

10th தமிழ் இயல் 3.2 காசிக்காண்டம்
: :

1. காசிக்காண்டம் என்ற நூலை இயற்றியவர் யார்? அதிவீரராம பாண்டியர்
2. விருந்தோம்பல் ஒழுக்கங்கள் எத்தனை? ஒன்பது
3. ஒன்பது விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களைக் கூறியவர் யார்? அதிவீரராம பாண்டியர்
4. அருகுற என்பதன் பொருள் என்ன? அருகில்
5. முகமன் என்பதன் பொருள் என்ன? ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
6. நன்மொழி என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? பண்புத்தொகை
7. வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? தொழிற்பெயர்
8. ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மைபேசி என்ற வரி இடம் பெற்ற நூல் எது? விவேகசிந்தாமணி
9. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் எது? காசிக்காண்டம்
10. காசிக்காண்டம் எதை விளக்குவதாக அமைந்துள்ளது? துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள்
11. முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் யார்? அதிவீரராம பாண்டியன்
12. அதிவீரராம பாண்டியரின் மற்றொரு நூல் எது? வெற்றி வேற்கை
13. வெற்றி வேற்கை என்ன பெயரால் அழைக்கப்படுகிறது? நறுந்தொகை
14. சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர் யார்? அதிவீரராம பாண்டியன்
15. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் போன்ற நூல்கள் எழுதியவர்? அதிவீரராம பாண்டியன்